பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசியப் பிரதமர் ஒருவரின் மகன் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.
20களில் இருப்பதாக நம்பப்படும் அந்த ஆடவர், சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) தாமான்சரா சுங்க நுழைவாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறியது.
சோதனை நடத்தியபோது 3கிராம் ஹெராயின் போதைப்பொருளை அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கைது நடவடிக்கையை சிலாங்கூர் காவல்துறைத் தலைமை அதிகாரி ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தினார்.

