முன்னாள் அதிபர் யூனின் மனைவி கைது: தென்கொரியா

2 mins read
https://www.straitstimes.com/asia/east-asia/south-koreas-former-first-lady-arrested-after-court-issues-warrant-yonhap-reports
d5e7323d-2561-4127-b9b3-96fd0cf8f282
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். - படம்: இபிஏ

சோல்: தென்கொரிய முன்னாள் அதிபரின் துணைவி கிம் கியோங் ஹீ, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யும்படி செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 12) நீதிமன்றம் கைதாணை பிறப்பித்ததாக யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தென்கொரியாவில் முன்னாள் அதிபரின் மனைவி கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. திரு கிம்மின் கணவரும் முன்னாள் அதிபருமான திரு யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவச் சட்டத்தை அறிவித்ததை அடுத்து விசாரணைக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

கறுப்பு உடையில் நீதிமன்றம் வந்த திருவாட்டி கிம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் இல்லை எந்தக் கருத்தையும் கூறவில்லை.

விசாரணை முடிந்ததும் அவர் சோலில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

திருவாட்டி கிம்மைக் கைது செய்யும்படி சோலின் மத்திய வட்டார நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது.

அவர்மீது பங்குச் சந்தை மோசடி, கையூட்டு வாங்கியது, வர்த்தக உரிமையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய சட்டவிரோத கடத்தல், அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2022ஆம் ஆண்டு தமது கணவருடன் நேட்டோ உச்சநிலைச் சந்திப்புக்குச் சென்றபோது 60 மில்லியன் வோனுக்கும் அதிகமான மதிப்புடைய ‘வான் கிளீஃப் அண்ட் ஆர்பல்ஸ்’ சங்கிலி பதக்கத்தை அணிந்து சென்றதன் மூலம் திருவாட்டி கிம்மை சட்டத்தை மீறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தப் பதக்கம் சட்டப்படி தம்பதியின் நிதிப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

திருவாட்டி கிம் 20 மில்லியன் வோனுக்கும் அதிகமான இரண்டு‌ ‌‌ஷனெல் பைகளையும் ஒரு வைர அட்டிகையையும் சமயக் குழுவிடமிருந்து கையூட்டாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. சமயக் குழுவின் வர்த்தகத்துக்குச் சாதகமாக நடந்துகொள்ள அந்தக் கையூட்டை அவர் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

திருவாட்டி கிம் சான்றுகளை அழிக்கலாம் என்றும் விசாரணையில் தலையிடலாம் என்றும் கூறி அவரைக் கைது செய்யும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

குறிப்புச் சொற்கள்