தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலைநயமிக்க பிரஞ்சு ஹோட்டல் செப்டம்பர் 23 முதல் திறப்பு

1 mins read
58d45a4a-9a92-4290-a828-39d52404d377
சுவர்கள், தரைகள், மேற்கூரைகள் ஆகியவற்றில் ஹோட்டல், அழகான கலைக்கூறுகளைக் கொண்டிருக்கும்.  - படம்: மாமா ஷெல்டர் சிங்கப்பூரில்

பிரஞ்சு ஹோட்டல் ‘மாமா ஷெல்டர்’ சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 23முதல் செயல்படவுள்ளது. 

சமர்செட் எம்ஆர்டி நிலையத்திற்கு ஐந்து நிமிட நடை தூரத்தில் இந்த ஹோட்டல் உள்ளது. 

ஏழு மாடிகளைக் கொண்டுள்ள இந்த ஹோட்டலில் 115 அறைகள் இருக்கும்.

2008ல் பிரான்சில் நிறுவப்பட்ட ஷெல்டர், உலகம் முழுவதிலும் தனது பெயரில் 19 சொத்துக்களைக் கொண்டுள்ளது. 

அவற்றில் 11 ஹோட்டல்கள், நிஸ், டூலூஸ், ரென் போன்ற நகரங்களில் உள்ளன. 

சிங்கப்பூரிலுள்ள அதன் ஹோட்டலில் 15 சதுர மீட்டர்  கொண்டுள்ள அறைக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்தால் அதற்கான கட்டணம், ஓர் இரவுக்கு 190 வெள்ளி. அதற்கு அடுத்து சராசரி கட்டணங்கள் 240 வெள்ளியிலிருந்து தொடங்கும். 

அறைகளில் கிட்டத்தட்ட பாதி, மொட்டை மாடிப்பகுதியுடன் சேர்ந்து இருக்கும்.

சுவர்கள், தரைகள், மேற்கூரைகள் ஆகியவற்றில் ஹோட்டல், அழகான கலைக்கூறுகளைக் கொண்டிருக்கும். 

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவுகளில் இங்கு நேரடி இசை நிகழ்ச்சி நடத்தப்படும். அத்துடன், ஞாயிற்றுக்கிழமை 11.30 மணிக்கும் 3.30 மணிக்கும் இடையேயும் இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படும். 

குறிப்புச் சொற்கள்