தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குமமோட்டோ மாநிலத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.
ஜப்பான் ரயில் துறையின் ரயில் பாதைகள் 74 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமையன்று (அக்டோபர் 10) முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. குமமோட்டோ மாநிலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உட்டோ, யாட்சுஷிரோ ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இது மறுசீரமைப்பின் முதல் படி என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் ரயில் பாதை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒன்று ஆகும். செப்டம்பரில் முழுமையாக இயங்கத் தொடங்கிய கியூஷூ ஷிங்கான்சென் புல்லட் ரயில் பாதையின் மாற்றுப் போக்குவரத்துடனும் மாற்றுப் பேருந்துகளுடனும் பயணிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) வரை பயணம் செய்து வந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ரயில் பாதையில் தண்டவாளங்கள் உருக்குலைந்தது, மின் கம்பங்கள் உடைந்து பெருஞ்சேதங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டது. தண்டவாளங்களை மாற்றுவது, புதிய கம்பங்கள் மற்றும் வான்வழி மின்வடங்களைப் பொருத்துவது போன்ற பழுதுபார்ப்புப் பணிகள் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
