புகைமூட்டம்: ஃபயர்ஃபிளை விமானச் சேவை தொடர்ந்து 10வது நாளாக ரத்து

புகைமூட்டம்: ஃபயர்ஃபிளை விமானச் சேவை தொடர்ந்து 10வது நாளாக ரத்து

படம்: சாவ்பாவ்

18 Oct 2026 - 9:15 pm

1 mins read

மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ‘ஃபயர்ஃபிளை’ சுபாங் விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்திற்கும் இடையிலான விமானச் சேவைகளை தொடர்ந்து 10வது நாளாக ரத்து செய்துள்ளது.

இந்த வழித்தடத்திலான விமானச் சேவைகளை திங்கட்கிழமையும் (அக்டோபர் 19) ரத்து செய்வதாக அந்த மலேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, புகைமூட்டம் காரணமாக, இந்த இரு விமான நிலையத்திற்கும் இடையிலான விமானச் சேவைகளை அக்டோபர் 10 முதல் 12 வரை அந்நிறுவனம் ரத்து செய்திருந்தது.

அதன் பிறகு, அக்டோபர் 14 வரையிலும் பின்னர் அக்டோபர் 16 வரையிலும் என இருமுறை அந்தப் பயண ரத்தை அது நீட்டித்திருந்தது.

‘ஃபயர்ஃபிளை’ தனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 17 முதல் 19 வரை சிங்கப்பூர்-மலேசிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு வழிளிலும் தலா ஆறு விமானச் சேவைகளை அந்நிறுவனம் இயக்கி வந்தது.

குறிப்புச் சொற்கள்
விமானச் சேவைரத்துசிலேத்தார்