தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்

1 mins read
0d9a9755-3621-4716-9c48-270df350d7df
மலேசியாவில் நாடு முழுவதும் தற்போது 34,400 சரிவுநிலப்பகுதிகள் உள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: இனி வரவுள்ள வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்ட சரிவுநிலப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது 34,400 சாய்வு நிலப்பகுதிகள் இருப்பதாக மலேசியப் பொதுப்பணித் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார். 

தீபகற்ப மலேசியாவில் 1,066 சரிவுநிலப்பகுதிகளும் சாபாவில் ஏழும் சரவாக்கில் ஒன்றும் லபுவானில் 13 சரிவுநிலப்பகுதிகளும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அதிக அபாயத்தில் இருப்பதாக திரு நந்தா கூறினார்.

“இருந்தபோதும், ஒரே அளவிலான அபாயம் எல்லாப்பகுதிகளிலும் இல்லை. எங்கள் பேரிடர் நடவடிக்கைப் பிரிவு மூலம் இந்த நிலப்பகுதிகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்போம்,” என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்களுக்கான முன்தயாரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான ஆரம்பகட்ட ஆயத்தப் பணிகளையும் பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். நிலச்சரிவு அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சாலைகளுக்கு மாற்றுவழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திரு நந்தா கூறினார்.

குறிப்புச் சொற்கள்