சுங்கை பூலோவில் சாதகமான நிலையில் உள்ளேன்: ரமணன்

சுங்கை பூலோவில் சாதகமான நிலையில் உள்ளேன்: ரமணன்

படம்: த ஸ்டார்

17 Oct 2026 - 3:54 pm

1 mins read

சுங்கை பூலோ: சுங்கை பூலோவில் நான் என்னால் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன். இங்கு நான் ஒரு சாதகமான நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன் என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுவாரா என்று கேட்கப்பட்டபோது, ​​பிகேஆர் கட்சியின் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

சனிக்கிழமையன்று (அக்டோபர் 17) கோத்தா டமான்சாராவில் நடைபெற்ற ‘புரோகிராம் மடானி கித்தா’ நிகழ்வைத் தொடங்கி வைத்து, அங்குள்ள குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கோத்தா டமான்சாரா, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.

“என்னைப் பொறுத்தவரை, என்னால் இயன்றவரை மிகச் சிறந்ததைச் செய்திருக்கிறேன். தொடர்ந்து எனது சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் சிறப்பாகச் செயல்படத் தொடர்ந்து முயல்வேன். இறுதியில், மக்களே முடிவெடுப்பார்கள்.

“இருப்பினும், இன்று நான் கண்டவற்றின் அடிப்படையிலும், குடியிருப்பாளர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த கருத்துகளின் அடிப்படையிலும், இது மிகவும் சாதகமான ஒரு சூழல் என்று நான் கருதுகிறேன்,” என்றார்.

சுங்கை பூலோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத் தடுப்புத் திட்டம் வெற்றி பெற்றுள்ளதை, பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தவர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கருத்துகுடியிருப்பாளர்ரமணன் ராமகிருஷ்ணன்