தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் படித்தொகை அதிகரிப்பு

1 mins read
202304ba-55a2-4b29-bbf3-ef328d58cba1
இனி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 700 மில்லியன் ரூப்பியா (S$54,900) படித்தொகை கிடைக்கும். இதற்கு முன்பு 400 மில்லியன் ரூப்பியா படித்தொகை வழங்கப்பட்டது. - படம்: மெட்ரோ ஹோல்டிங்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் படித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (அக்டோபர் 13) வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் அண்மையில் இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தோனீசியாவின் 38 மாநிலங்களில் 32 மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

இதில் ஏறத்தாழ 10 பேர் மாண்டனர். குறைந்தது 5,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பைத் தணிக்க அறிவிக்கப்பட்ட சலுகைகளில் சிலவற்றை இந்தோனீசிய அரசாங்கம் ரத்து செய்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் படித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இனி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 700 மில்லியன் ரூப்பியா (S$54,900) படித்தொகை கிடைக்கும். இதற்கு முன்பு 400 மில்லியன் ரூப்பியா படித்தொகை வழங்கப்பட்டது.

இந்த படித்தொகை அதிகரிப்புக்கு நிதி அமைச்சு கடந்த மே மாதம் ஒப்புதல் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்லும்போதும் அங்கு நடைபெறும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும் படித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாபடித்தொகைநாடாளுமன்ற உறுப்பினர்