தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரான் எண்ணெய் ஏற்றுமதி; நிறுவனங்கள், கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

1 mins read
f163c930-0ea1-492e-b3eb-be633b6490b1
தடைகளை மீறி ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டதால் அவற்றின்மீதும் அதன் உரிமையாளர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வாஷ்ங்டன்: ஹாங்காங், சீனா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், மார்ஷல் தீவுகள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு செயல்படும் 13 நிறுவனங்கள்மீது ஈரான் தொடர்பான கூடுதல் தடைகளை வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 21) அமெரிக்கா விதித்துள்ளது.

அத்தடை உத்தரவு எட்டு எண்ணெய் கப்பல்களுக்கும் பொருந்தும் என அமெரிக்க நிதி அமைச்சு தெரிவித்தது.

இந்த நடவடிக்கைகள் கிரேக்க நாட்டவரான அன்டோனியோஸ் மார்கரிடிஸ், அவரது நிறுவனங்கள், கப்பல்கள் ஆகியவற்றின்மீது மேற்கொள்ளப்பட்டன.

தடைகளை மீறி ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டதால் அவற்றின்மீதும் அதன் உரிமையாளர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.

ஹாங்காங்கில் இருக்கும் ‘ஏரஸ் ஷிப்பிங் லிமிடெட்’, ஹாங்காங் ஹாங்ஷுன் ஷிப்பிங் லிமிடெட், மார்ஷல் தீவுகளில் செயல்படும் ‘கம்ஃபர்ட் மேனஜ்மண்ட் ஆகிய நிறுவனங்கள்மீதும், பனாமா கொடியைத் தாங்கிய ‘அட்லைன் ஜி’ ‘காங்ம்’ எண்ணெய் கப்பல்கள்மீதும், சாவோ டோம், பிரின்சிப்பி கொடியைத் தாங்கிய ‘லாஃபிட்’ கப்பல்மீதும் கூடுதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சொன்னது.

குறிப்புச் சொற்கள்