வாஷிங்டன்: பொது இடங்களில் தலைகாட்டுவதைத் தவிர்த்து வந்த ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானின் மகனும் அமெரிக்கப் பாடகருமான ஜேசீ சான் திடீரென தலைகாட்டியிருக்கிறார்.
2014ஆம் ஆண்டில் போதைப்பொருள் சம்பவத்தில் சிக்கிய அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
அதன் பிறகு, மோங்க் கம்ஸ் டவுன் த மவுண்டன் (2015), ரெயில்ரோடு டைகர்ஸ் (2016), குட்நைட் பெய்ஜிங் (2021) ஆகிய மூன்று படங்களில் அவர் நடித்திருந்தார்.
தென்கொரியாவில் நடைபெற்ற கொரிய அமெரிக்க விளம்பர அழகி ஐரின் கிம்மின் திருமணத்தில் ஜேசீ சான் அரிதாகக் காணப்பட்டார்.
42 வயதான அவர், துடிப்புடன் இருந்தார். திருமணமான தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்து மற்றவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விளம்பர அழகி ஐரின் கிம்மின் ஆடம்பரமான திருமணத்தில் ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சான், தற்போது தைப்பே நகரில் வசித்து வருவதாக சைனா பிரஸ் ஊடகம் தெரிவிக்கிறது.
இரவு கேளிக்கை விடுதிகளில் அவர் நண்பர்களுடன் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் அவரது வீட்டில் 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது அவர் போதைப்பொருள் உட்கொண்டதும் தெரிய வந்தது.

