இந்தோனீசியாவில் சிறார் பராமரிப்பு நிலையத்தை நடத்தும் அறநிறுவனத் தலைவருக்குச் சிறை

இந்தோனீசியாவில் சிறார் பராமரிப்பு நிலையத்தை நடத்தும் அறநிறுவனத் தலைவருக்குச் சிறை

ஒன்பது ஆண்டுச் சிறைத்தண்டனை
படம்: ராய்ட்டர்ஸ்

27 Nov 2026 - 3:43 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் யோக்யகார்த்தா நகரில் பகல்நேர சிறார் பராமரிப்பு நிலையத்தை நடத்தும் அறநிறுவனத்தின் தலைவருக்கு அந்நகர நீதிமன்றம் ஒன்று ஒன்பது ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தேசிய அளவில் எதிரொலித்த சிறார் துன்புறுத்தல் சம்பவத்தையடுத்து, லிட்டில் அரே‌ஷா டேகேர் சென்டர் எனும் பகல்நேர சிறார் பராமரிப்பு நிலையத்தின் தலைவரான தியா கியூசுமஸ்துதிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உரிமமின்றி நிலையத்தை நடத்தியது, சிறார் துன்புறுத்தலுக்கு வழிவிடும் அளவிற்கு கவனிமின்றி நடந்துகொண்டது ஆகிய குற்றங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 26) நிரூபிக்கப்பட்டதாக டெத்திக், கும்பாரான் போன்ற உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

லிட்டில் அரே‌ஷா பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டிலிருந்து ஆறு வயதுக்கு உட்பட்ட சிறார் பலரின் கை, கால்கள் ஒன்றாகக் கட்டிப்போடப்பட்டிருந்தது காணப்பட்டது.

தியாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.

தியாவுக்கு 900 மில்லியன் ரூப்பியா (63,162 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அவர் 200 மில்லியன் ரூப்பியாவைத் திருப்பித் தருமாறு உத்தரவிடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தனது கட்சிக்காரர் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறிப்புச் சொற்கள்