ஜப்பானில் மிகவும் பிரபலமானது அகின்டோ சுஷிரோ உணவகம். அது அந்நாடு முழுவதும் பல கிளைகளை வைத்துள்ளது.
சூஷி வகை உணவுகளுக்கு பெயர்போன அந்த உணவகத்தில் அண்மையில் ஓர் இளையர் குறும்புத்தனம் செய்தார், அது காணொளியாக வெளியாகி உணவகத்தின் வர்த்தகத்தை பெரிய அளவில் பாதித்தது.
உணவகத்தில் ரயில் தண்டவாளம் போல் அமைக்கப்பட்டு அதில் உணவுகள் வைக்கப்பட்டு சுற்றிவரும். பிடித்தமான உணவை வாடிக்கையாளர்கள் உண்ணலாம்.
இளையர் உணவுகள் செல்லும் போது அதில் இருக்கும் போத்தல்கள், தட்டுகள், உணவுகளை எடுத்து சுவைத்துப் பார்த்துள்ளார்.
அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அதைத்தொடர்ந்து உணவகம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது.
அதன் பின் அது காவல்துறையில் புகார் கொடுத்தது.
உணவகத்தின் பங்குகளும் சரிந்ததால் அது மேலும் அதன் வர்த்தகத்தை பாதித்தது.
அதைத்தொடர்ந்து தற்போது அந்த உணவகம் அந்த இளையரிடம் 645,000 வெள்ளி இழப்பீடு கேட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த இளையரைப் போலவே மற்ற உணவகங்களிலும் சிலர் குறும்புத்தனம் செய்து சமூக ஊடகங்களில் காணொளியாக வெளியிட்டனர். அதற்கு சுஷி உணவக உரிமையாளர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

