வெப்பத்தைச் சமாளிக்கும் நெற்பயிரை அதிகமாகச் சாகுபடி செய்யும் ஜப்பானியர்கள்

வெப்பத்தைச் சமாளிக்கும் நெற்பயிரை அதிகமாகச் சாகுபடி செய்யும் ஜப்பானியர்கள்

1 mins read
611bf780-f9cb-44e9-9bfb-1b01b560995a
கினுமுசுமே (Kinumusume) நெல் வகை அதிகமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தோசிகினோஹோ‌ஷி (Tochiginohoshi), கோ‌ஷிபுகி (Koshiibuki) உள்ளது. - படம்: பெக்சல்ஸ்

தோக்கியோ: ஜப்பானிய விவசாயிகள் வெப்பத்தைச் சமாளிக்கும் நெற்பயிர்களை அதிகமாகச் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

நெல் சாகுபடியின் மொத்த எண்ணிக்கையில் தற்போது 18.2 விழுக்காடு வெப்பத்தைச் சமாளிக்கும் நெல் வகைகளாக உள்ளன. இது முப்பது ஆண்டுகளை ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகமாகும்.

முன்னர் எப்போதாவதுதான் கடுமையான வெப்பக் காலம் இருக்கும் ஆனால் இப்போது அடிக்கடி கடுமையான வெப்பச் சூழ்நிலை இருப்பதால் நெற் பயிர்கள் அதிகமாகச் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். உற்பத்தியும் குறைகிறது.

2025ஆம் ஆண்டு ஜப்பானில் 44 மாவட்டங்களில் வெப்பத்தைச் சமாளிக்கும் நெல் வகைகள் பயிரிடப்பட்டன.

ஜப்பானின் வேளாண், காடுகள், மீன்வளத் துறை அமைச்சின் தரவுகள்படி கடந்த ஆண்டு வெப்பத்தைச் சமாளிக்கும் நெல் வகைகள் 248,000 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டன.

குறிப்பாக மேற்கு ஜப்பானில் இந்த நடவடிக்கை அதிகமாக உள்ளது.

2024ஆம் ஆண்டு, வெப்பத்தைச் சமாளிக்கும் நெல் வகைகள் 42,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டன.

கினுமுசுமே (Kinumusume) நெல் வகை அதிகமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தோசிகினோஹோ‌ஷி (Tochiginohoshi), கோ‌ஷிபுகி (Koshiibuki) வகைகள் உள்ளன.

சாகா வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் நெற் பயிர்களில் 66.9 விழுக்காட்டு வெப்பத்தைச் சமாளிக்கும் நெற் பயிர்கள் ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் நாகாசாக்கி (49.8), ‌ஷிமான் (47.3) வட்டாரங்கள் உள்ளன.

ஹோக்காய்டோ, இவாத், ஒகினாவா ஆகிய வட்டாரங்களில் வெப்பத்தைச் சமாளிக்கும் நெற் பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதில்லை.

குறிப்புச் சொற்கள்