புதன்கிழமை முதல் 6 மாதத்துக்கான பயணச்சீட்டு விற்பனை

2026 முதல் கோலாலம்பூர்- ஜோகூர் மின்சார ரயில் சேவை இரட்டிப்பாகிறது

1 mins read
708f7292-cc31-4292-9c4a-5124f0760698
கேஎல் சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 12ஆம் தேதி ஜேபி சென்ட்ரலுக்கு வந்த மின்சார ரயில் சேவை (இடிஎஸ்3).  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

கோலாலம்பூர்: கோலாலம்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையேயான மின்சார ரயில் சேவை (இடிஎஸ்3) 2026 முதல் இரட்டிப்பாக்கப்படும் என்று மலேசிய தேசிய ரயில் கழகம் (கேடிஎம்பி) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அறிவித்துள்ளது.

கேஎல் சென்ட்ரல் - ஜேபி சென்ட்ரல் - கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் தற்போது தினமும் நான்கு இடிஎஸ் சேவைகள் உள்ளன. இது எட்டாக உயர்த்தப்படும் என்று கூறியுள்ளது.

மேலும், கெமாஸ்-கோலா லிப்பிஸ் வழித்தடத்தில் இரண்டு கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். இது மொத்த அன்றாட சேவைகளை தினசரி சேவைகளாக அதிகரிக்கும்.

குறிப்பாகத் தைப்பூசம், சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் போன்ற பொது விடுமுறை நாள்களிலும் விழாக்காலங்களிலும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மே மாதம் வரை ஆறு மாத பயண காலத்திற்கான பயணச்சீட்டு விற்பனை புதன்கிழமை (டிசம்பர் 17) நண்பகல் வாக்கில் தொடங்கும் என்று கேடிஎம்பி தெரிவித்தது.

பயணச்சீட்டுகளை KITS Style செயலி, கேடிஎம்பியின் அதிகாரபூர்வ இணையத்தளம், கேடிஎம்பி தானியக்க இயந்திரங்கள் வழியாக வாங்கலாம்.

பாடாங் பெசாரிலிருந்து ஜோகூர் பாருவரையிலான மின்சார ரயில் பாதையின் கட்டுமான நிறைவு தேசிய ரயில் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது என்று கேடிஎம்பி தலைமை தொழில்நுட்ப அதிகாரி (தற்காலிகக் குழு தலைமை நிர்வாக அதிகாரி) அஹ்மத் நிஜாம் முகமது அமின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்