சோல்: உலகிலேயே ஆக அதிக அளவு நீட்டி மடக்கக்கூடிய மின்திரையை எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது, ஏறக்குறைய 50 விழுக்காடு அளவுக்கு திரையை நீட்டி இழுக்க முடியும். இது, இந்தத் துறைக்குள் ஆக அதிக அளவு நீட்டிக்கக்கூடிய திரையாகக் கருதப்படுகிறது.
ஐந்து ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு சாத்தியாகியிருக்கும் இந்தக் கண்டுபிடிப்பு நவம்பர் 8ஆம் தேதி எல்ஜி சயன்ஸ் பார்க்கில் நடைபெற்ற தொழிற்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
எல்ஜியின் புதிய 30 செ.மீட்டர் கணினி திரையை 46 செ.மீட்டர் வரை இழுத்து நீட்டிக்க முடியும்.