பாத்தாம் மின்தடைக்கு மின்னல், விலங்கு குறுக்கீடு காரணங்களாக இருக்கலாம்: அமைச்சர்

பாத்தாம் மின்தடைக்கு மின்னல், விலங்கு குறுக்கீடு காரணங்களாக இருக்கலாம்: அமைச்சர்

படம்: அல்டி

15 Oct 2026 - 5:13 pm

1 mins read

பாத்தாம்: மின்சாரக் கட்டமைப்பில் மின்னல், விலங்கு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடிய இடையூறுகள் இந்தோனீசியாவின் பாத்தாமிலும் ரியாவ் தீவுகளின் மற்ற சில பகுதிகளிலும் பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று இந்தோனீசிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அந்த மின்தடையால் வர்த்தகங்கள், தொடர்புகள், நீர் விநியோகம் ஆகியவை பாதிக்கப்பட்டன.

மின்தடை உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (அக்டோபர் 12) காலை 6.30 மணியளவில் தொடங்கியது. தஞ்சோங் பினாங், பிந்தான் ஆகியவையும் பாதிக்கப்பட்டன. மின்தடை கிட்டத்தட்ட 16 மணி நேரம் நீடித்ததாக இந்தோனீசிய ஊடகமான தெத்திக் தெரிவித்தது.

இதனால் பொருளியல் ரீதியாக ஏறத்தாழ 233.5 பில்லியன் ரூப்பியா (16.76 மில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டதாக இந்தோனீசியப் பொருளியல் வல்லுநர்ச் சங்கத்தின் பாத்தாம் பிரிவு தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சாரக் கட்டமைப்புச் செயல்பாடுகளைப் பாதிக்கும் பல தொழில்நுட்பப் பிரச்சினைகளைப் பற்றித் தாம் புகார்களைப் பெற்றதாக இந்தோனீசியாவின் நீடித்த நிலைத்தன்மை, எரிசக்தி உருமாற்ற ஒருங்கிணைப்பு அமைச்சரான பாஹில் லஹாடாலியா கூறினார்.

வெளவால் என்று நம்பப்படும் விலங்கு மின்தடைக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். அதுகுறித்து மேல்விவரங்களை அவர் வழங்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
உலகம்இந்தோனீசியாபாத்தாம்மின்தடைஎரிசக்திஅமைச்சர்