ஹாங்காங்கில் கடுங் குளிர்

1 mins read
e70f173f-6391-42b6-9f51-5976c90a530a
நியூ டெரிட்டரிசின் சில பகுதிகளில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாகப் பதிவானது. - படம்: ஏஎஃப்பி

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 12) வெப்பநிலை 11 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.

இது இந்தப் பனிக்காலத்தில் ஹாங்காங்கில் பதிவாகியுள்ள ஆகக் குறைந்த வெப்பநிலை.

இந்தத் தகவலை ஹாங்காங் வானிலை மையம் வெளியிட்டது.

நியூ டெரிட்டரிசின் சில பகுதிகளில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாகப் பதிவானது.

இதற்கு நேர் எதிராக நகரத்தில் வெயிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகரத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் இரவு நேரங்களிலும் காலை நேரங்களிலும் கடுங் குளிர் இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

கடுங் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூத்தோரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹாங்காங் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெளிப்புற இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தகுந்த ஆடைகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில நாள்களில் ஹாங்காங்கில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்