பங்ளாதேஷ் குடிசைப் பகுதிகளில் பெருந்தீ: ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன

1 mins read
cd490b1e-0fe6-466d-9fdc-a70598ad4d80
தலைநகர் டக்காவின் மத்தியில் உள்ள கொரெய்ல் குடிசைப்பகுதியில் மாலை நேரத்தில் தீ ஏற்பட்டது. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டக்காவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் அதிகமாக வாழும் கொரெய்ல் குடிசைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) சூரியன் மறைந்த மாலை நேரத்தில் பெருந்தீ விபத்து நிகழ்ந்தது.

பங்ளாதேஷில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் அதுவும் ஒன்றாகும். சுமார் 80,000 பேர் அங்கு வசிப்பதாக அறியப்படுகிறது. அந்தச் சேரிகள், குல்ஷான் மற்றும் பனானி எனப்படும் செல்வந்தர்கள் வசிக்கும் பல உயர்மாடிக் குடியிருப்புகளுக்கு இடையே அமைந்துள்ளது.

காயம் அடைந்தோர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. கிடைத்ததை எடுத்துக்கொண்டு மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். இரவு வானில் செந்நிறப் பிழம்புகளும் கரும்புகையும் அப்பகுதியை மூழ்கடித்தன.

19 தீயணைப்பு வாகனங்கள் நெருப்பை அணைக்கப் போராடின. போக்குவரத்து நெரிசலும் குடிசைகள் அமைந்திருந்த சிறு பாதைகளும் தீயணைப்பு வாகனங்கள் தீயை நெருங்கத் தடையாய் அமைந்தன என்று தீயணைப்புச் சேவையின் அதிகாரி தல்ஹா பின் சசிம் கூறினார்.

ஐந்து மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு, தீ கட்டுக்குள் வந்தது. அந்தச் குடிசைப் பகுதி முழுமையாக அழிந்துவிட்டது உறுதியானது.

மக்கள் சட்டங்களை மீறுவதும் அதிகாரிகளின் அமலாக்கச் சீர்கேடும் தெற்காசிய நாடான பங்ளாதேஷில் அண்மைய ஆண்டுகளில் பல தீச் சம்பவங்களுக்கும் மரணங்களுக்கும் காரணங்களாக இருந்துள்ளன.  

குறிப்புச் சொற்கள்