தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விநியோகத் தொடருக்கான சூழலை மேம்படுத்தும் மலேசியா

1 mins read
eaf34385-885d-46a0-8d8a-5ed40f3fe039
பகுதி மின்கடத்திகள் தொடர்பான விநியோகச் சங்கிலியை மலேசியா வலுப்படுத்துவது மலேசியாவுக்கு மட்டுமல்ல, ஆசியானுக்கும் முக்கியமானது என்று மலேசியாவின் முதலீட்டு, வர்த்தகம், தொழில் துணை அமைச்சர் லியூ சின் டோங் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: புதிய ஒப்பந்தங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மலேசியா அதன் விநியோகச் சங்கிலி சுற்றுச்சூழலை மேம்படுத்த இருக்கிறது.

பகுதி மின்கடத்திகள் தொடர்பான விநியோகச் சங்கிலியை மலேசியா வலுப்படுத்துவது மலேசியாவுக்கு மட்டுமல்ல, ஆசியானுக்கும் முக்கியமானது என்று மலேசியாவின் முதலீட்டு, வர்த்தகம், தொழில் துணை அமைச்சர் லியூ சின் டோங் தெரிவித்தார்.

விநியோகச் சங்கிலி சுற்றுச்சூழலை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் அதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் திரு லியூ தெரிவித்தார்.

மலேசியத் தொழில்துறையின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்றார் அவர்.

திங்கட்கிழமையன்று (அக்டோபர் 13) நாடாளுமன்றத்தில் பேசிய திரு லியூ இக்கருத்துகளை முன்வைத்தார்.

விநியோகச் சங்கலியை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் போட்டித்தன்மை நிலைநாட்டப்படும் என்றார் அவர்.

பகுதி மின்கடத்திகள் தொடர்பாக பிரேசிலுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் மலேசியா கூடிய விரையில் கையெழுத்திடும் என்றும் திரு லியூ கூறினார்.

பகுதி மின்கடத்திகளுடன் மற்ற பொருள்கள் தொடர்பாக இந்தியாவுடன் மலேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய ஒப்பந்தங்கள் மலேசிய வர்த்தகங்களுக்கு மேலும் பல வாய்ப்புகளை அள்ளித் தரும் என்று திரு லியூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்