மலேசியா: தீவிபத்தில் சிக்கி இரு சகோதரிகள் பலி

மலேசியா: தீவிபத்தில் சிக்கி இரு சகோதரிகள் பலி

படம்: பெர்னாமா

16 Oct 2026 - 5:57 pm

1 mins read

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள சித்தியவான் நகருக்கு அருகே உள்ள கம்போங் கோ எனும் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) காலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இரு பதின்ம வயதுச் சகோதரிகள் உயிரிழந்தனர்.

தீயில் எரிந்து நாசமான இரண்டு மாடி வீடுகளுக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

பலியான சகோதரிகளுக்கு 15 மற்றும் 18 வயது ஆகின்றது என்று பேராக் மாநிலத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

சம்பவம் குறித்து தங்களுக்குக் காலை 9 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக அதிகாரிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து, சித்தியவான், செரி மஞ்சோங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தீவிபத்தில் அருகருகே அமைந்திருந்த அவ்விரு ‘சி’ வகுப்பு வீடுகள் கிட்டத்தட்ட 90 விழுக்காடு சேதமடைந்தன.

மேலும், நான்கு வாகனங்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் அந்தத் தீச்சம்பவத்தில் எரிந்து நாசமாகின. காலை 10.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விசாரணைக்கு உதவ தீயணைப்புத் துறையின் சிறப்பு கே9 மோப்ப நாய் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான இருவரின் உடல்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதீஈப்போ