தொடர்ந்து சரியும் ரிங்கிட்; தாளாமல் போராடும் மலேசியர்கள்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எண்ணி மலேசியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.77க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நோன்பு மாதத்தையும் நோன்புப் பெருநாளையும் கொண்டாடுவது தங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் என மலேசியர்கள் கூறினர்.

விற்பனை, சேவை வரியை 6 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக அந்நாட்டு அரசு உயர்த்துவதும் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

“தம் குடும்ப உறுப்பினர்கள் ரமலான் மாதத்தில் பேரீச்சம்பழங்கள் விநியோகம் செய்வதைப் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சியால் அதை இவ்வாண்டு நிறுத்தப் போகிறோம்,” என மலேசியாவில் ஆடை விற்பனைக் கடை ஒன்றை நடத்தி வரும் 46 வயதான சலேஹா சயித் கூறினார்.

“நாங்கள் எப்பொழுதும் ஒரு லாரி நிறையப் பேரீச்சம்பழங்களை வாங்கி அதனைப் பள்ளிவாசல், ஆதரவற்றோர் இல்லம், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் விநியோகம் செய்வோம். ஆனால், இவ்வாண்டு அவர்களை எங்கள் வீட்டிற்கு நோன்பு துறத்தலுக்கு மட்டும் அழைக்கலாம் என எண்ணியுள்ளோம். இந்த ஆண்டு எங்களால் இதுதான் முடியும்,” என மிக வேதனையோடு அவர் தெரிவித்தார்.

“ஐரோப்பா சுற்றுலா அழைத்துச் செல்வேன் என நான் என் பிள்ளைகளுக்கு அளித்த வாக்குறுதியை என்னால் இவ்வாண்டு நிறைவேற்ற முடியாது,” என மலேசியாவில் உள்ளூர் நிறுவனம் ஒன்றில் சந்தை நிறுவன மேலாளராகப் பணியாற்றும் 36 வயதான டேனியல் ஹாஷிம் கூறினார்.

“எங்கள் சேமிப்பு முழுவதையும் ஐரோப்பா சுற்றுலா செலவழிக்க முடியாது. மற்ற தேவைகளுக்கும் சேமிப்பு தேவை. மேலும், எங்கள் வருமானத்தைத் தவிர மற்ற அனைத்தும் உயர்ந்துள்ளன. வரும் மார்ச் மாதம் நாங்கள் கூடுதல் விற்பனை, சேவை வரி செலுத்த வேண்டும்,” என வீழ்ச்சி அடைந்துவரும் ரிங்கிட் மதிப்பைச் சுட்டிக்காட்டி திரு டேனியல் வருத்தத்துடன் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!