பிரேசிலிய அனைத்துலக விமான நிலையத்தில் ஆடவர் சுட்டுக் கொலை

1 mins read
aee50099-c948-4f09-ae31-f00a2e80caa8
சாவ் பாவ்லோ அனைத்துலக விமான நிலையத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சாவ் பாவ்லோ: பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சம்பவம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) பிற்பகலில் நிகழ்ந்தது. சாவ் பாவ்லோ அனைத்துலக விமான நிலையம், அந்நாட்டில் பயணிகளிடையே ஆகப் பரபரப்பாக இருக்கும் விமான நிலையமாகும்.

கொலைக்குப் பின்னால் உள்ள காரணம் போன்ற விவரங்களை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவ் பாவ்லோ பாதுகாப்பு அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் மேலும் பெண் ஒருவரும் ஆடவர்கள் இருவரும் காயமுற்றனர். அந்த ஆடவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறையினர் கூறினர். காவல்துறை மேல்விரங்கள் ஏதும் வழங்கவில்லை.

சம்பவ இடத்துக்குக் காவல்துறையினரும் மருத்துவக் குழுக்களும் அழைக்கப்பட்டதாக சாவ் பாவ்லோ விமான நிலையத்தை நடத்துவோர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு, சாவ் பாவ்லோ அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள வருகையாளர் வளாகத்தில் நிகழ்ந்ததுபோல் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செயய்ப்பட்ட காணொளிகளில் தெரிந்தது. ஆனால், காவல்துறை அத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்