மலேசியா செல்வோர் கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்த புதிய ஏற்பாடு

1 mins read
8c290bf0-0d57-4fcd-89af-837458c2702d
‘டச் அண் கோ இ-வாலட்’ செயலிக்குப் பதிந்துகொண்டோர், தங்கள் சொந்த நாட்டில் கடன் அல்லது பற்று அட்டைகளைக் கொண்டு அச்செயலியில் பணம் நிரப்பிக்கொள்ளலாம். - கோப்புப் படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: ஆசியான் நாடுகளிலிருந்து மலேசியா செல்லும் சுற்றுப்பயணிகள், அங்குள்ள தகுதிபெறும் வணிகங்களில் கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்த ‘டச் அண் கோ இ-வாலட்’டுக்கு இனி பதிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூர், புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு இது பொருந்தும்.

பொதுவாக ஏடிஎம் அட்டை மூலம் கட்டணங்களை ஏற்காத உணவங்காடிக் கடைகள் போன்ற உள்ளூர் வணிகங்களுக்கு இந்த ஏற்பாடு பலனளிக்கும் விதமாக அமையும் என ‘டச் அண் கோ டிஜிட்டல்’ கூறியது.

‘டச் அண் கோ இ-வாலட்’ செயலிக்குப் பதிந்துகொண்டோர், தங்கள் சொந்த நாட்டில் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அல்லது பற்று அட்டைகளைக் கொண்டு அச்செயலியில் பணம் நிரப்பிக்கொள்ளலாம்.

சரிபார்ப்புக் குறியீடுகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் என்பதால், செயலியில் பதிந்துகொள்ள அவர்கள் மலேசிய கைப்பேசி எண்ணைப் பயன்படுத்த தேவையிராது.

இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஹாங்காங், தைவான், ஜப்பான் உள்ளிட்ட ஆசியான் நாடுகள் அல்லாத மற்ற சந்தைகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என டச் அண் கோ டிஜிட்டல் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்