சிறிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நியூசிலாந்து தேசியக் கட்சி

சிறிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நியூசிலாந்து தேசியக் கட்சி

படம்: இபிஏ

29 Nov 2026 - 5:47 pm

1 mins read

வெலிங்டன்: நியூசிலாந்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் தெளிவான வெற்றியாளர் இன்றி தோல்வியில் முடிந்ததை அடுத்து அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்சோன் ஒப்பர்ச்சூனிட்டி கட்சியிடம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமது நடு வலசாரி கூட்டணியை ஆட்சியில் தக்கவைக்க அந்தப் பேச்சுவார்த்தையைத் திரு லுக்சோன் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்றத்துக்கான பெரும்பான்மையைப் பெற தவறியதை அடுத்து திரு லுக்சோனின் தேசியக் கட்சி, கிலே வோங்கின் தலைமையிலான ஒப்பர்ச்சூனிட்டி கட்சியின் ஆதரவை நாடுகிறது.

தேசியக் கட்சி, அதன் பங்காளிக் கட்சிகள், ஒப்பர்ச்சூனிட்டி கட்சி ஆகியவற்றின் கொள்கைகள் அனைத்தும் மாறுபட்டிருப்பதால் சமரசபேச்சு சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டுவரை நீடிக்கக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

கிலே வோங்கிற்கும் திரு லுக்சோனிற்கும் இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றதாகத் திரு லுக்சோனின் பேச்சாளர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தேசியக் கட்சி ஊழியர்களின் தலைவர் ஆக்ட் கட்சி, நியூசிலாந்து முன்னுரிமை கட்சி ஆகியவற்றின் ஊழியர்களின் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசியதாகவும் அறிக்கை சொன்னது.

திரு லுக்சோனின் நடு வலசாரி தேசியக் கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் 40 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஆக்ட் கட்சி 13 இடங்களையும் நியூசிலாந்து முன்னுரிமை கட்சி 12 இடங்களையும் வென்றன.

நாடாளுமன்றத்தில் புதிதாக அடி எடுத்துவைக்கும் ஒப்பர்ச்சூனிட்டி கட்சி ஏழு இடங்களைத் தட்டிச் சென்றது.

குறிப்புச் சொற்கள்