வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க மேற்கத்தியர்களுக்குத் தடை: வடகொரியா

1 mins read
4b8bb6f9-b67f-48b8-b8f1-11200ed69b24
வரும் அக்டோபரில் நடைபெறும் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சிக்கு வரும் பேராளர் குழுவில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆதிக்கம் செலுத்துபவர்கள் பங்கேற்க வடகொரியா தடை விதித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: வரும் அக்டோபரில் நடைபெறும் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சிக்கு வரும் பேராளர் குழுவில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆதிக்கம் செலுத்துபவர்கள் பங்கேற்க வடகொரியா தடை விதித்துள்ளது.

சீனாவைத் தளமாகக் கொண்ட பயண நிறுவனம் ஒன்று இத்தகவலை வெளியிட்டது.

அரசதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியா அண்மைய மாதங்களாக அனைத்துலகப் பயணிகளை வரவேற்று வருகிறது.

அந்த வகையில் ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக பியோங்யாங்கில் ஏப்ரலில் நடைபெற்ற அனைத்துலக மராத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்துலக தடைகளின்கீழ் முடக்கப்பட்டுள்ள வடகொரியாவுக்கு வரலாற்றுபூர்வமாக ஆகப்பெரிய பொருளியல் அரசதந்திர, அரசியல் ஆதரவாளராக சீனா இருந்து வருகிறது.

வர்த்தகக் கண்காட்சியையொட்டி ‘யங் பயனியர் டூர்ஸ்’ என்ற சுற்றுலா நிறுவனம், அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை வெளிநாட்டு சுற்றுலாக் குழுவை வடகொரியாவுக்கு அழைத்துச் செல்கிறது.

இருந்தாலும் செய்தியாளர்கள், பயண உள்ளடக்க ஊடகவியலாளர்கள், ஆதிக்கம் செலுத்துவோர் ஆகியோர் சுற்றுப் பயணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அந்நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து வடகொரியாவிடமிருந்து குறிப்பு வந்துள்ளதாக யங் பயனியல் சுற்றுப் பயண நிறுவனம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்