மலாக்காவின் 28 இடங்களிலும் பக்கத்தான் ஹரப்பான் போட்டி

மலாக்காவின் 28 இடங்களிலும் பக்கத்தான் ஹரப்பான் போட்டி

1 mins read
cdabbe94-98c0-4b77-b812-3bf90caa55a9
மலாக்காவின் அனைத்துத் தொகுதிகளிலும் பக்கத்தான் ஹரப்பான் போட்டியிடும் என்று முகைதீன் யாசின் கூறினார். - கோப்புப்படம்: என்எஸ்டிபி

மலாக்கா: மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதைப் பக்கத்தான் ஹரப்பான் உறுதிசெய்துள்ளது.

அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தொகுதிப் பங்கீடு குறித்துக் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று பக்கத்தான் ஹரப்பானின் துணைத் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

வெற்றிக்கான சிறந்த உத்திகள் உறுதிசெய்யப்படும் என்றார் அவர்.

அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாக அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருவதால், பக்கத்தான் ஹரப்பான் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. அதே நேரத்தில், பரிசீலனைக்காக வேட்பாளர்களின் பெயர்களை முன்மொழியுமாறு பெர்சத்து பிரிவுத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நற்குகுணம், நேர்மை, நிரூபிக்கப்பட்ட சாதனைகள், அனுபவம் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் நெருங்கிய நல்லுறவு உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றனர்.

“யார் வேண்டுமானாலும் போட்டியிட முன்வரலாம். ஆனால் நல்ல குணம், அனுபவம் மற்றும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வேட்பாளர்களையே நாங்கள் விரும்புகிறோம்,” என்று சனிக்கிழமை இரவு கிளெபாங்கில் நடைபெற்ற மலாக்கா பெர்சத்து தேர்தல் நிர்வாக அமைப்பின் தொடக்க விழாவில் அவர் கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள மற்ற கட்சிகளுடன் பக்கத்தான் ஹரப்பான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கூட்டுப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்படும் என்றும் திரு முகைதீன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்