ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கான ‘பிகேஆர்’ கட்சி வேட்பாளர் பட்டியல் தயார்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கான ‘பிகேஆர்’ கட்சி வேட்பாளர் பட்டியல் தயார்

1 mins read
5a70ba96-2498-48b2-bcb1-9184c288c5c6
இரு மாநிலங்களுக்குமான வேட்பாளர் பட்டியலில், முதியவர்கள், புதியவர்கள், பெண்கள், இளையர்கள் என சமச்சீராக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஃப்ரி மலேசியா டுடே

ஜோகூர் பாரு: ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான கெஅடிலான் கட்சி (பிகேஆர்) வேட்பாளர் பட்டியல் தற்போது 99 விழுக்காடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோகூரில் உள்ள மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் இருபதிலும் நெகிரி செம்பிலானில் உள்ள 16 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என்று பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.

அதோடு, வேட்பாளர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஆகவே, முதியவர்கள், புதியவர்கள், பெண்கள், இளையர்கள் என ஒரு சமச்சீராக பட்டியல் அமைந்திருக்கும்,” என்றார் அவர்.

புத்ரி வங்சா சட்டமன்றத்திற்கு எதிரான ஜோகூர் அமானாவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஃபுசியா, சம்பந்தப்பட்ட தொகுதித் தகராறு பிரச்சினை தீர்க்கப்படுவதற்காக கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்டத் தலைமைத்துவத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான துணை அமைச்சருமான ஃபுசியா, இரு பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளுக்கும் இடையே நடந்து வரும் சர்ச்சை குறித்து கருத்துத் தெரிவித்தார்.

அந்தத் தொகுதியைக் கெஅடிலான் கட்சிக்கு வழங்க தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்று ஜோகூர் அமானா துணைத் தலைவர் ஸுஹைன் ஸேன் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருஅறிவிப்புபிகேஆர்