வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் பர்பேங்க் நகரிலிருந்து சவுத்வெஸ்ட் ஏர்னைல்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் செல்ல இருந்த நேரம் மற்றொரு விமானத்துடன் மோத இருந்தது.
விபத்தைத் தவிர்க்க சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் அதை வேகமாகத் திசை திருப்பினர்.
இதில் அந்த விமானத்தில் இருந்த இரண்டு சிப்பந்திகள் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நிகழ்ந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், விமான விபத்துகள் ஏற்படாமல் இருக்க விமானிகள் திடீர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.
சம்பவத்துக்குப் பிறகு அந்த விமானம் தொடர்ந்து லாஸ் வேகஸ் நகருக்குப் பறந்தது. லாஸ் வேகஸ் நகரை அது பத்திரமாக அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

