துபாய்: துபாய்க்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுவோருக்கு நற்செய்தி காத்திருக்கிறது.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதிவரை, ‘எமிரேட்ஸ்’ல் முதல் பிரிவு அல்லது வர்த்தகப் பிரிவில் இருவழிப் பயணச் சீட்டுகளை வாங்குவோர், ‘ஜேடபிள்யூ மேரியட் மார்கிஸ் ஹோட்டல் துபாய்’ எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு இரவுகள் இலவசமாகத் தங்கலாம்.
‘பிரிமியம் இக்கானமி’ அல்லது ‘இக்கானமி’ பிரிவுகளில் பயணம் மேற்கொள்வோர், ஓரிரவு அங்கு இலவசமாகத் தங்கலாம்.
இந்த வாய்ப்பு, துபாய்க்கு இருவழிப் பயணச் சீட்டுகளை வாங்கும் அனைவருக்கும், 24 மணி நேரத்திற்கும் மேல் துபாயில் இருக்கும் இடைவழி மாறும் பயணிகளுக்கும் பொருந்தும்.
பயணத் தேதிகள் ஜூலை 4 முதல் செப்டம்பர் 15 வரை இருக்கவேண்டும் என்று ‘எமிரேட்ஸ்’, செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.