கருத்துக்கணிப்பு: இரண்டாம் கட்டத் தேர்தலை நோக்கி முன்னேறும் லெ பென், மெலென்சொன்

கருத்துக்கணிப்பு: இரண்டாம் கட்டத் தேர்தலை நோக்கி முன்னேறும் லெ பென், மெலென்சொன்

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 6:48 pm

2 mins read

பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெற்ரோனின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், பிரெஞ்சு அரசியலில் தீவிர நிலைப்பாடுகள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில், புதிய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

‘டோலுனா ஹாரிஸ் இன்டராக்டிவ்’ நிறுவனம் அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை நடத்திய அந்தக் கருத்துக்கணிப்பில், தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லெ பென், தீவிர இடதுசாரித் தலைவரான ஜான்-லூக் மெலென்சோன் இருவரும் மற்ற வேட்பாளர்களைவிட கணிசமான வாக்குவித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

சோதிக்கப்பட்ட அனைத்துச் சூழலிலும் அவர்கள் இருவருமே இரண்டாம் கட்டத் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என்று திங்கட்கிழமை (அக்டோபர் 12) வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்று வாக்குகள்

இந்தக் கருத்துக்கணிப்பின்படி, மரின் லெ பென் 35 விழுக்காடு முதல் 37 விழுக்காடு வரையிலான வாக்குகளைப் பெற்று முதல் சுற்றில் முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய கருத்துக்கணிப்பு ஒப்பீடு

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற கருத்துக்கணிப்பில் அவருக்கு 33 விழுக்காடு முதல் 36 விழுக்காடுவரை வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.

‘ஃபிரான்ஸ் அன்பாவ்டு’ கட்சியின் வேட்பாளரான மெலென்சோன், சோதிக்கப்பட்ட ஐந்து சூழல்களிலும் இரண்டாம் கட்டத் தேர்தலை எட்டுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எடுக்கப்பட்ட இதேபோன்ற கருத்துக்கணிப்பில், ஐந்து சாத்தியக்கூறுகளில் இரண்டில் அவர் மூன்றாம் இடத்தையே பிடிப்பார் எனக் காட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது ஆதரவு குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.

இருப்பினும், நேரடியாக மோதும் இரண்டாம் கட்டத் தேர்தலில் மெலென்சோனை, லெ பென் மிக எளிதாகத் தோற்கடிப்பார் என்று அந்தக் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்
கருத்துக்கணிப்புபிரான்ஸ்தேர்தல்