காபூல்: கொலைக் குற்றவாளி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆப்கானிஸ்தானின் தலிபான் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றினர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) நிகழ்ந்தது. இத்தகவலை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
மங்கள் என்ற பெயர் கொண்ட ஆடவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் பகுதியில் உள்ள விளையாட்டரங்கத்தில் நிறைவேற்றப்பட்டது.
தலிபான் அமைப்பு 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 12 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

