இஸ்லாமாபாத்: வாட்ஸ்அப் செயலியில் இயங்கி வந்த ஒரு குழுவிலிருந்து அகற்றப்பட்ட ஆடவர் ஒருவர், அந்த வாட்ஸ்அப் குழுவை நிர்வகித்தவரைச் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் மார்ச் 7ஆம் தேதி மாலை பெஷவார் பகுதியில் நடந்தது.
கொல்லப்பட்ட முஷ்தக் அகமது, வாட்ஸ்அப் குழு ஒன்றை நிர்வகித்து வந்தார். அவருக்கும் அக்குழுவில் இருந்த அஷ்ஃபக் கான் என்ற ஆடவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முஷ்தக் அஷ்ஃபக்கை அக்குழுவிலிருந்து அகற்றினார்.
இதனால், அஷ்ஃபக் ஆத்திரமடையவே இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதையடுத்து முஷ்தக் துப்பாக்கியால் அஷ்ஃபக்கைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அஷ்ஃபக் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அரப் நியூஸ் தெரிவித்தது.
தனது சகோதரன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அங்கு இருந்ததாகக் கூறிய ஹுமாயுன் கான், “சின்ன பிரச்சினையாக இருந்திருக்கும். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதுகூட என் குடும்பத்துக்குத் தெரியாது,” என்றார்.
சண்டையிட்ட இருவரையும் சமாதானப்படுத்த இரு சாராரும் முயன்ற வேளையில் துப்பாக்கிசூடு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சந்தேக நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தால் இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சிறு சிறு விஷயத்திற்குத் துப்பாக்கியால் சுடுவதா? என்று வினவினார் ஒருவர். மின்னிலக்க உலகால் ஓர் உயிர் பறிக்கப்பட்டதா? என்றார் மற்றொருவர்.