பல கிழக்கு உக்ரேனியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளோம்: ர‌ஷ்யா

1 mins read
08ac79b1-f865-4003-ab27-1e1883c42d5f
டொனியெட்ஸ்க் வட்டாரத்தில் ர‌ஷ்யப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராகும் உக்ரேனிய வீரர். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: கிழக்கு உக்ரேனில் உள்ள பல முன்களப் பகுதிகளைத் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக ர‌ஷ்ய தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) ர‌ஷ்யா இவ்வாறு கூறியதை கியவ் மறுக்கவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை.

டொனியெட்ஸ்க் வட்டாரத்தில் உள்ள, குடியேறிகள் வாழும் நான்கு பகுதிகள் இப்போது தங்கள் வசம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ர‌ஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. அவற்றில், உக்ரேனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரெவியான்ஸ்க் நகருக்கு கிழக்கே இருக்கும் யாம்பில் பகுதியும் அடங்கும்.

ர‌ஷ்யா உள்ளே நுழைய முயன்றபோதும் யாம்பில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக உக்ரேன் வியாழக்கிழமை (நவம்பர் 20) கூறியிருந்தது.

பெரிய அளவில் அழிக்கப்பட்டுவிட்ட குப்பியான்ஸ்க் நகரைத் தங்கள் படைகள் கைப்பற்றியதாக ர‌ஷ்யாவின் படைத் தளபதி ஒருவர் வியாழக்கிழமை கூறினார். ஆனால், உக்ரேன் அதை மறுத்தது.

குப்பியான்ஸ்க் மீது ர‌ஷ்யா ஆறு முறை தாக்குதல் நடத்தியதாக கியவ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) சொன்னது. ஆனால், அப்பகுதி கைமாறியதைப் பற்றி கியவ் எதுவும் கூறவில்லை.

குறிப்புச் சொற்கள்