1,246 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

1,246 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

படம்: ராய்ட்டர்ஸ்

28 Nov 2026 - 4:36 pm

1 mins read

மாஸ்கோ: உக்ரேனுக்குச் சொந்தமான 1,246 ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்தப்பட்ட தாக்குதலில் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் மாஸ்கோவை நோக்கி 460க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாகவும் நகரை நெருங்கிய 123 ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்கே சொப்யானின் ரஷ்ய அரசாங்க ஆதரவுடன் செயல்படும் ‘மேக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்கோ உட்பட் 12க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1,246 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைத் தங்களது வான் தற்காப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.

இதனிடையே, தானும் தாக்குதல்களைத் தொடுத்ததாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஸப்போரிஸியா பகுதிமீது 700க்கும் மேற்பட்ட ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதில் ஒருவர் மாண்டதாகவும் ஐவர் காயமடைந்ததாகவும் உக்ரேனின் ராணுவ நிர்வாகத் தலைவர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்தார். ஆனால், ராணுவப் பகுதிகளையே தான் குறிவைத்துத் தாக்கியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

ரஷ்யா - உக்ரேன் இடையிலான போர் ஐந்தாமாண்டு நிறைவை நெருங்குகிறது. ஆயினும், கைதிகள் பரிமாற்றத்தைத் தவிர, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் சமரச முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்