பாலியல் துன்புறுத்தல்: சமயப் பள்ளியின் உதவி ஆசிரியருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
695571e6-f6c2-4d34-b4cf-d7f939e5c82c
14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக ஃபைஸால் மீது குற்றம் சாட்டப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோத்தா திங்கி: ஜோகூரின் மெர்சிங் பகுதியில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த 45 வயது முகம்மது ஃபைஸால் மன் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்ட 15 குற்றச்சாட்டுகளையும் ஃபைஸால் ஒப்புக்கொண்டதை அடுத்து பிப்ரவரி 13ஆம் தேதி ஃபைஸாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 30 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பள்ளியில் கடந்த ஆண்டு 14 வயது மாணவனை ஃபைஸால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்பட்டது.

சிறைவாசத்தின்போது மறுவாழ்வு தொடர்பான மனநல ஆலோசனைக்கு ஃபைஸால் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அத்துடன் சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பின்பும் ஓராண்டு காலத்திற்குக் காவல்துறையின் கண்காணிப்பின்கீழ் ஃபைஸால் வைக்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்