16 வயது நிரம்பாத மலேசியர்களுக்கு 2026 முதல் சமூக ஊடகத் தடை

1 mins read
4b2efb51-2ded-4726-ae67-6758e60f42cc
சமூக ஊடக நிறுவனங்கள் 2026 முதல் அடையாளச் சரிபார்ப்பை அமல்படுத்தும் என மலேசியா எதிர்பார்க்கிறது. - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: 16க்கும் குறைவான வயதுடைய மலேசியர்கள் 2026ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்கமுடியாது என்றும் அதற்கு அவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை விவரித்த அவர், அதற்கேற்ற வகையில் சமூக ஊடகத் தள நிறுவனங்கள் 2026ல் அடையாளச் சரிபார்ப்பை (eKYC) அமல்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நடைபெற்ற இணைய மோசடி விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்கேற்ற திரு ஃபஹ்மி, சமூக ஊடகத்தைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா டிசம்பர் முதல் அமல்படுத்தும் வயது வரம்புக் கட்டுப்பாட்டை அணுக்கமாகக் கண்காணிக்க இருப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்