நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தமது ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் இரண்டு பங்குகளை வழங்கப்போவதாக உலகின் ஆகப் பெரிய செல்வந்தர் இலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
விண்வெளி, செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ செயல்பட்டு வருகிறது.
பரிசாக வழங்கப்படும் பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 18 பில்லியன் அமெரிக்க டாலர் (S$23 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்திடமிருந்து ஒரு பங்கும் தம்மிடமிருந்து ஒரு பங்கும் வழங்கப்படும் என மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
நிறுவனப் பங்குகள் டிசம்பரிலும், தமது பங்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என்றார் அவர்.
செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு டிரம்ப் கணக்கிற்கும் (Trump Account) ஒரு புதிய பங்கை வழங்குவதாக ஸ்பேஸ்எக்ஸ் முன்னதாகத் தெரிவித்தது.
18 வயதிற்குட்பட்ட அமெரிக்கர்கள் பங்குச் சந்தையில் பங்கேற்க உதவும் இத்திட்டத்தில் ஏறக்குறைய 70 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அக்டோபர் மாதத்தில் கூறியது.
தற்போது ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கின் மதிப்பு 127.44 அமெரிக்க டாலராக உள்ளது.
824 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள மஸ்க், ஜூன் மாத நிலவரப்படி 6.42 பில்லியன் பங்குகளை வைத்திருந்தார்.
