மலேசிய இந்தியச் சமூகக் கூட்டுறவுகளுக்கு சிறப்பு மானியம்

1 mins read
b86f5337-3e70-4c8a-aa44-7a99b9a33e55
அக்டோபர் 13ஆம் தேதியன்று பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான இந்தியச் சமூகக் கூட்டுறவுகள் மாநாட்டில் கலந்துகொண்ட கூட்டுறவுகள் மட்டுமே நிதியைப் பெற விண்ணப்பம் செய்யலாம் என்று துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார். - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: மலேசிய இந்தியச் சமூகக் கூட்டுறவுகளுக்கு மலேசியக் கூட்டுறவு ஆணையம் வாயிலாக 30,000 ரிங்கிட் வரையிலான சிறப்பு மானியம் வழங்கப்படும் என்று மலேசியாவின் தொழில்முனைவர், கூட்டுறவுகள் மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதியன்று பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான இந்தியச் சமூகக் கூட்டுறவுகள் மாநாட்டில் கலந்துகொண்ட கூட்டுறவுகள் மட்டுமே நிதியைப் பெற விண்ணப்பம் செய்யலாம் என்று துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.

“கூட்டுறவுகளின் பொருளியல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே நிதியின் இலக்கு. விண்ணப்பம் செய்யும் முறை, நிதி தொடர்பான நிபந்தனைகள் ஆகியவை குறித்த தகவல்களை மாநாட்டுக்குப் பிறகு ஆணையத்திடமிருந்து கூட்டுறவுகள் பெற்றுக்கொள்ளலாம்,” என்று அமைச்சர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியத் தொழில்முனைவர்களுக்கு உதவி செய்யும் திட்டங்களைப் பொறுத்தவரை, செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை 136 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமணன் கூறினார்.

“இந்தத் திட்டங்கள் மலேசிய இந்தியத் தொழில்முனைவர்களைத் தற்போதைவிட உயர்ந்த நிலைக்குக் கொண்ட செல்ல இலக்கு கொண்டுள்ளன. நாட்டின் இந்தியச் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே அவற்றின் குறிக்கோள்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்