தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கணிதத்துறையில் முதல் முறையாக நோபெல் பரிசு பெற்ற பெண்

1 mins read
fcd0d18e-ce2f-4794-afb8-087db72ce082
-

அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கௌரவ பேராசிரியர் கேரன் உஹ்லென்பெக் (Uhlenbeck), கணிதத்துறையில் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாகத் திகழ்கிறார்.

வடிவியல் (geometry), கணக்குத்துறை சார்ந்த பௌதிகம் ஆகியவற்றின் தொடர்பில் அவர் செய்திருந்த ஆய்வுகளை இந்தப் பரிசு அங்கீகரிப்பதாக அதனை வழங்கிய நார்வே நாட்டின் அறிவியல், ஆய்வுப்பத்திரச் சங்கம் (Norwegian Academy of Science and Letters) தெரிவித்துள்ளது.

பேராசிரியர் உஹ்லென்பெக் பற்றி கருத்துரைத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணக்குத்துறை நிபுணர் சன் யூங் எலிஸ் சாங், "எவரும் நினைத்திராத சாதனைகளை இவர் செய்து முடித்திருக்கிறார். கணக்குத்துறையின் ஒரு பிரிவுக்கே இவர் அடித்தளம் அமைத்திருக்கிறார்," என்று கூறினார்.

76 வயது பேராசிரியர் உஹ்லென்பெக்கிற்கு $700,000 (946,000 வெள்ளி) பரிசுத்தொகை வழங்கப்படும்.