நான்காவது மாடியிலிருந்து மனைவியைத் தள்ளிவிட்ட ஆடவர்

1 mins read
22d4d19c-f6e8-4aa4-8bbc-421e741c4ba9
-

கணவன், மனைவிக்கு இடையே மூண்ட தகராறு விபரீதத்தில் முடிந்தது. வாய்ச்சண்டை முற்றி யதில் விமான நிலையத்தின் நான் காவது மாடியிலிருந்து மனைவியை தள்ளிவிட்டார் ஓர் ஆடவர். சீன அமெரிக்கரான வான், 32, தைவானின் தைவோயுவான் அனைத்துலக விமான நிலையத் தில் திருவாட்டி சாங், 33, எனப் படும் தமது மனைவியுடன் வாக்கு வாதம் செய்ததாகக் கூறப்பட்டது. அவ்விருவரும் நான்காவது மாடியின் படிக்கட்டு அருகே சென்றபோது வாக்குவாதம் முற் றியது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற நிலையில் ஆடவர் திடீ ரென்று தமது மனைவியை அலாக் காகத் தூக்கி நகரும் படிக்கட்டின் பக்கவாட்டில் தள்ளி விட்டாராம்.