அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா

வாஷிங்டன் விலங்கியல் பூங்காவில் பிறந்த ‘பெய் பெய்’ எனும் பாண்டா கரடி, இன்று சீனாவுக்கு செல்லவிருக்கிறது. கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவுக்கு சீனா இரண்டு பாண்டாக்களைப் பரிசளித்தது. 2015ஆம் ஆண்டு இவை ஈன்ற குட்டி ‘பெய் பெய்’ எனும் பெயரில் வாஷிங்டனின் வளர்ந்தது. நான்கு வயதாகும்போது குட்டியை ஒப்படைக்க வேண்டுமென்ற ஒப்பந்தப்படி இன்று சீனா செல்லவிருக்கும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடியது. படம்: இணையம்