தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ர‌ஷ்யா அடுத்த மாதம் படையெடுக்கக்கூடும்

2 mins read
8b19a9e7-a0ff-47e7-a724-3844d6de044b
ர‌ஷ்ய போர்க்கப்பல்கள் பீரங்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு கூறியது. படம்: ராய்டடர்ஸ் -

உக்ரேன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வா‌ஷிங்­டன்: உக்­ரேன் மீது அடுத்த மாதம் ரஷ்யா படை­யெ­டுப்­ப­தற்­கான சாத்­தி­யம் இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் எச்­ச­ரித்­துள்­ளார்.

உக்­ரேன் அதி­ப­ரு­டன் தொலை­பே­சி­யில் உரை­யா­டிய அவர், இவ்­வாறு சொன்­ன­தாக வெள்ளை மாளிகை குறிப்­பிட்­டது.

இதற்­கி­டையே, ர‌ஷ்­யா­வின் முக்­கிய கோரிக்­கை­களை அமெ­ரிக்கா நிரா­க­ரித்­து­விட்ட நிலை­யில், நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண்­ப­தற்­கான நம்­பிக்கை சிறி­த­ளவு உள்­ள­தாக ர‌ஷ்யா கூறி­யுள்­ளது.

உக்­ரேன் எல்­லை­யில் ர‌ஷ்யா படை­க­ளைக் குவித்­துள்­ளது, அண்­மைய வாரங்­களில் பெரும் பதற்­றத்­தைத் தூண்­டி­யுள்­ளது. இருப்­பி­னும் உக்­ரேன் மீது படை­யெ­டுக்­கும் எண்­ணம் இல்லை என்றே ர‌ஷ்யா தொடர்ந்து கூறு­கிறது.

அர­ச­தந்­திர ரீதி­யில் இதற்­குத் தீர்வு காண்­பது குறித்­தும் பைட­னு­டன் பேசி­ய­தாக உக்­ரேன் அதி­பர் சொன்­னார்.

உக்­ரே­னுக்கு எதி­ரான ர‌ஷ்­யா­வின் அச்­சு­றுத்­தல் போக்கு குறித்து ஐநா பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்­டும் என்­றும் அமெ­ரிக்கா கோரிக்கை விடுத்­துள்­ளது.

இதற்கிடையே, உக்­ரேன் மீது படை­யெ­டுத்தால், அது எரி­வாயு குழாய் திட்­டத்­தைப் பாதிக்­கும் என்று அமெ­ரிக்­கா­வும் ஜெர்­ம­னி­யும் ர‌ஷ்­யாவை எச்­ச­ரித்­துள்­ளன.

இந்நிலையில், உக்­ரே­னின் தெற்கே கருங்­க­ட­லில் ர‌ஷ்ய போர்க்­கப்­பல்­கள் பீரங்கி சுடும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக ர‌‌ஷ்யத் தற்­காப்பு அமைச்சு கூறி­யுள்­ளது.

சென்ற புதன்­கி­ழமை முதல் 20 போர்க்­கப்­பல்­கள் வான்­வழி, கடல் இலக்­கு­களை நோக்கி சுடும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன என்­றும் இப்­ப­யிற்சி நேற்­று­டன் முடி­வ­டை­ய­இருந்­த­தா­க­வும் அது கூறி­யது.

அத்­து­டன் உக்­ரேன் எல்­லையை ஒட்­டிய தெற்கு ரோஸ்­டோவ் பகு­தி­யில் உள்ள ரஷ்ய பீரங்கி படை­கள் எதிரி படை­கள், கவச வாக­னங்­களை அழிக்­கும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன.

கன­ரக ஆயுத வாக­னங்­க­ளைக் கொண்டு செல்­வ­தற்கு ஏது­வாக, உக்­ரே­னில் தரை உறைந்து போகும் வரை ரஷ்யா காத்­தி­ருப்­ப­தா­கச் சில ராணுவ வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.