தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: கொவிட்-19 விதிமுறையில் மாற்றம்

2 mins read
7e315395-c833-43e5-a151-8d26f40eb485
-

பெட்­டா­லிங் ஜெயா: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் அறி­கு­றி­கள் இல்­லா­த­வர்­க­ளா­க­வும் 'பூஸ்­டர்' எனப்படும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளா­க­வும் இருந்­தால் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார். இந்­தப் புதிய விதி­முறை அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­

லி­ருந்து நடப்­புக்கு வரும் என்­றார் அவர்.

"கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மூலம் கொவிட்-19 கிருமி பர­வும் சாத்­தி­யம் மிக­வும் குறைவு என்று கொவிட்-19 தொடர்­பான தர­வு­கள் காட்­டு­கின்­றன. ஒரு­வ­ருக்கு அறி­கு­றி­கள் இல்­லா­விட்­டால் அவ­ரி­ட­மி­ருந்து கிருமி மற்­ற­வர்­க­ளுக்­குப் பர­வும் சாத்­தி­ய­மும் குறைவு," என்று அமைச்­சர் கைரி தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் தொட­ரும் என்று அவர் கூறி­னார். கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தும் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்­லா­த­வர்­கள் முதல் நாளி­லும் மூன்­றா­வது நாளி­லும்-19 சுய பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­யா­ன­தும் அவர்­கள் வழக்­கம்­போல் தங்­கள் அன்­றாட நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம். கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தால் அதி­கா­ரி­க­ளி­டம் அது­கு­றித்து தெரி­விக்க வேண்­டும் என்­றார் அவர்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு அறி­கு­றி­கள் இல்­லா­விட்­டா­லும் அவர்­கள் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளாக இருந்­தால் ஐந்து நாள்­

க­ளுக்­குத் தங்­க­ளைத் தனி­மைப்­

ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று திரு கைரி கூறி­னார்.

மலே­சி­யா­வில் நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி மேலும் 32,070 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 31,861 பேருக்­குச் சமூக அள­வில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட 209 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து மலே­சி­யா­வுக்­குச் சென்­ற­வர்­கள்.

இதன்­மூ­லம் மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 3,337,227ஆக அதி­க­ரித்­துள்­ளது. மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக தற்­போது மொத்­தம் 8,039 பேர்

மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­

பட்­டுள்­ள­னர். அவர்­களில் 327 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.