பெட்டாலிங் ஜெயா: கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகள் இல்லாதவர்களாகவும் 'பூஸ்டர்' எனப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாகவும் இருந்தால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய விதிமுறை அடுத்த மாதம் 1ஆம் தேதியி
லிருந்து நடப்புக்கு வரும் என்றார் அவர்.
"கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலம் கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் மிகவும் குறைவு என்று கொவிட்-19 தொடர்பான தரவுகள் காட்டுகின்றன. ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் அவரிடமிருந்து கிருமி மற்றவர்களுக்குப் பரவும் சாத்தியமும் குறைவு," என்று அமைச்சர் கைரி தெரிவித்தார்.
இருப்பினும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் கூறினார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாதவர்கள் முதல் நாளிலும் மூன்றாவது நாளிலும்-19 சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானதும் அவர்கள் வழக்கம்போல் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தால் அதிகாரிகளிடம் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களாக இருந்தால் ஐந்து நாள்
களுக்குத் தங்களைத் தனிமைப்
படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு கைரி கூறினார்.
மலேசியாவில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 32,070 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 31,861 பேருக்குச் சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 209 பேர் வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் சென்றவர்கள்.
இதன்மூலம் மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,337,227ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கிருமித்தொற்று காரணமாக தற்போது மொத்தம் 8,039 பேர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டுள்ளனர். அவர்களில் 327 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

