தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செம்பனை எண்ணெய் ஏற்றுமதி தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 mins read
ebe31ae5-5e19-4e3d-99d2-1609f1814cf6
-

செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து இந்தோனீசியாவின் சிறு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்றுமதி தடையால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டதாகக் கூறி தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தடை அறிவிப்புக்குப் பிறகு, செம்பனைப் பழத்தின் விலை நிர்ணயிக்கப் பட்டதைவிட 70 விழுக்காடு குறைந்துவிட்டதாக விவசாயிகள் அமைப்பு சொன்னது. உள்நாட்டில் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும் அது விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியதாகவும் செய்திகள் கூறுகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்