லண்டன்: மறைந்த எலிசபெத் அரசியாருக்கு மரியாதை செலுத்துவதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தவர்களை அரசியாரின் மகனும் பிரிட்டிஷ் அரசருமான மூன்றாம் சார்ல்ஸ் சந்தித்தார்.
இளவரசர் வில்லியமும் மக்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும், எலிசபெத் அரசியாரின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மக்கள் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அதிகாரப்பூர்வக் கண்காணிப்பு தகவல் கூறுகிறது.
வரிசையில் காத்திருந்து மயக்கமடைந்து விழுந்த 435 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, வரிசையில் காத்திருந்த ஆடவர் ஒருவர், அதிலிருந்து விலகி, அரசியாரின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் செல்ல முயன்றது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. பொதுச் சட்ட ஒழுங்கின்கீழ் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக லண்டன் போலிசார் கூறினர்.
அரசியாரின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக அரசர் மூன்றாம் சார்ல்ஸ் காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்களைச் சந்திக்கவுள்
ளார்.
நாளை நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் உலக நாடுகளில் இருந்து 500 தலைவர்கள் கலந்துகொள்வார் கள் என்று எதிர்பார்க்கப்படுகி
றது.

