மூட்டைப்பூச்சிக்கு எதிராக ஹாங்காங் மக்கள் அதிரடி நடவடிக்கை

மூட்டைப்பூச்சிக்கு எதிராக ஹாங்காங் மக்கள் அதிரடி நடவடிக்கை

1 mins read
b24a25aa-9f0d-4b99-a692-640ea07d9379
பழுப்புநிறத்தில் நீள்வட்ட வடிவில் பூச்சி ஒன்று, விமான நிலைய அதிவிரைவு ரயில் இருக்கை ஒன்றில் இருப்பதைக் காட்டும் படம் ஒன்று, இணையத்தில் வலம் வந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஹாங்காங்: ஹாங்காங்கில் மூட்டைப்பூச்சி தொடர்பில் அதிகரிக்கும் அச்சத்தைக் களைய, பூச்சிக்கொல்லிகளை வாங்குவதுடன் பூச்சிக் கட்டுப்பாட்டுச் சேவைகளை நாடும் போக்கு ஹாங்காங்வாசிகளுக்கு இடையே அதிகரித்துள்ளது.

பழுப்புநிறத்தில் நீள்வட்ட வடிவில் பூச்சி ஒன்று, விமான நிலைய அதிவிரைவு ரயில் இருக்கை ஒன்றில் இருப்பதைக் காட்டும் படம் ஒன்று, இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனால், நகரையே இந்த ரத்த உறிஞ்சிகள் ஆக்கிரமிக்கப் போகின்றன என்ற பயம் மக்களுக்கு உண்டாகிவிட்டது.

படம் நவம்பர் 9ஆம் தேதியன்று வெளியானதை அடுத்து ஹாங்காங்கின் ரயில் சேவை வழங்குநர் ‘எம்டிஆர் கார்ப்’, ஒருசில ரயில்களைச் சுத்தப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தவுள்ளது.

இதற்கிடையே, ஒரு மாத வேலையை மூன்று நாள்களில் செய்ய வேண்டியிருந்ததாக பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கூறியிருந்தார். 

குறிப்புச் சொற்கள்