திருடப்பட்ட பிக்காசோ, சாகல் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

திருடப்பட்ட பிக்காசோ, சாகல் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

1 mins read
2578c3b6-35cc-41d4-bd6d-f03c54e89fa5
பெல்ஜியம் நாட்டுக் காவலர்கள் திருடப்பட்ட பிக்காசோ, சாகல் ஓவியங்களை ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ் 

பிரசல்ஸ்: பெல்ஜியம் நாட்டு காவலர்கள் திருடப்பட்ட பிக்காசோ, சாகல் ஓவியங்களை ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் கண்டுபிடித்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

திருடப்பட்ட பிக்காசோவின் ‘தேத்’ (Tête), சாகலின் ‘ல ஹாம் என் பிரியர்’ (“L’homme en prière”)  ஓவியங்கள் 900,000 அமெரிக்க டாலர் (S$1.2 மில்லியன்) மதிப்புடையவை.

அவை, 2010ஆம் ஆண்டில் இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள ஒரு கலைச் சேகரிப்பாளரிடமிருந்து திருடப்பட்டன. 

அவற்றுடன், 680,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள நகைகளும் களவுபோயின.

இந்நிலையில், தற்போது ஓவியங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த இரண்டு ஓவியங்களையும் விற்பனை செய்யப்போவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. 

முக்கியச் சந்தேகப் பேர்வழி கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்