பரிசுத் தொகையை வெல்லாத ‘லாட்டரி’ எண்களைத் தந்ததற்காக புத்த பிக்கை அடித்த ஆடவர்

தமக்கு பரிசுப் பணத்தை வென்று தராத ‘லாட்டரி’ எண்களைக் கொடுத்ததற்காக புத்த பிக்கு ஒருவரை ஆடவர் அடித்த சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தது.

அதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரவலானது.

அந்த ஆடவர் தாக்கியதால் தடுமாறிய பிக்கு, தம்மைத் தற்காத்துக்கொள்ள முயன்றார். ஆனால், அவரை நெருங்கிய அந்த ஆடவர் தொடர்ந்து அடித்தார்.

அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்த மாது ஒருவர் தலையிடுவது காணொளியில் தெரிந்தது. ஆனால், அந்த மாதால் அந்த ஆடவரை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அந்தச் சண்டையில் தெளிவான முடிவு இல்லாமல் காணொளி நிறைவுபெற்றது.

அச்சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பது பற்றித் தெரியவில்லை.

புத்த பிக்கு வழங்கிய எண்களைக் கொண்டு அந்த ஆடவர் ஒவ்வொரு வாரமும் லாட்டரி சீட்டு வாங்கியதாகத் தெரிகிறது.

தாம் கொடுத்த எண்கள் நிச்சயமாக லாட்டரியில் பரிசு வெல்ல உதவும் என்று அந்தப் பிக்கு அந்த ஆடவரிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பிக்கு சொன்னதை நம்பிய அந்த ஆடவர், கடன்முதலைகளிடம் இருந்து கடன் பெற்று லாட்டரி சீட்டுகளை வாங்கியதாகத் தெரிகிறது.

ஆனால், கடைசிவரை வெல்லாத அந்த ஆடவர், கடன்சுமையில் சிக்கினார். விரக்தி அடைந்ததால் பிக்கை அவர் தாக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!