தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரேசிலின் அமேசான் காட்டில் கிட்டத்தட்ட 3,000 இடங்களில் தீ

1 mins read
4cd9e04c-0294-4f1d-b93f-48d391f31d8f
அமேசான் காட்டில் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் இதுவரை 2,940 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக பிரேசிலிய அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ஏஎஃப்பி

ரியோ டி ஜெனிரோ: பிப்ரவரி மாதத்தில் பிரேசிலின் அமேசான் காட்டில் கிட்டத்தட்ட 3,000 இடங்களில் காட்டுத் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டிலிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி மாதத்தில் அமேசான் காட்டில் ஆக அதிகமான காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக நிபுணர்கள் கூறினர்.

அமேசான் காட்டில் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் இதுவரை 2,940 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக பிரேசிலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு ஆக அதிக காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவான 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைவிட இது 67 விழுக்காடு அதிகம்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பதிவான தீச்சம்பவங்களைவிட இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பதிவான காட்டுத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம்.

காட்டுத் தீ ஏற்படுவதற்கு பருவநிலை முக்கிய காரணமாக இருப்பதாக பிரேசிலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீ